உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ருதிஹாசனுக்குப் பிடித்த கமல்ஹாசன் படங்கள்

ஸ்ருதிஹாசனுக்குப் பிடித்த கமல்ஹாசன் படங்கள்

தமிழ்த் திரையுலகின் மூத்த ஹீரோக்களில் ஒருவர் கமல்ஹாசன். 1960ல் வெளிவந்த 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து கடந்த 61 வருடங்களாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது, 'இந்தியன் 2, விக்ரம்' என இரண்டு படங்களின் கதாநாயகன் அவர் தான்.

கமல்ஹாசனின் மகள்கள் இருவரும் அப்பா வழியில் நடிப்பைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார். அக்ஷராஹாசன் தற்போது 'அக்னி சிறகுகள்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் இரு தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ சாட் செய்தார். ஒரு மணி நேரம் நடந்த அந்த வீடியோ உரையாடலில் பலரும் பலவிதமான கேள்விகளைக் கேட்டார்கள். அதில் ஒருவர் ஸ்ருதிக்கு பிடித்த கமல்ஹாசன் படங்கள் எவை எனக் கேட்டதற்கு, “மகாநதி' படம் ரொம்பவும் பிடிக்கும். 'அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி' ஆகியவையும் பிடிக்கும்,” எனப் பதிலளித்துள்ளார். சமீபத்தில் பார்த்த படம் என்று ஒருவர் கேட்டதற்கு 'மாஸ்டர்' மட்டுமே பார்த்தேன் என்று தெரிவித்தார்.

ஸ்ருதிஹாசன் தற்போது தனது காதலர் சாந்தனு ஹசரிகா என்பவருடன் லிவிங் டு கெதர் லைபில் இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !