மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1573 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1573 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1573 days ago
வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித் கதாநாயகனாக நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்திற்கு 'வலிமை அப்டேட்' என்று பெயர் மாற்றுமளவிற்கு எங்கெங்கோ 'வலிமை அப்டேட், வலிமை அப்டேட்,' என அஜித் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
பொறுமையிழந்த அஜித் கடந்த பிப்ரவரி மாதம் “ரசிகர்கள் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்,” என அறிக்கை விடுமளவிற்கு விவகாரம் சென்றது. அதன்பின் தயாரிப்பாளர் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வருமென்று அறிவித்தார். ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக அந்த அப்டேட் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தியேட்டர்களை ஜுலை மாதத்தில் இருந்து திறக்க வாய்ப்புள்ளதாக திரையுலகிலேயே தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் 'வலிமை அப்டேட்' எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவலுடன் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இத்தனை மாதங்களாக காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றாமல் சீக்கிரம் 'வலிமை அப்டேட்' பற்றி அதன் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
1573 days ago
1573 days ago
1573 days ago