மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1572 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1572 days ago
திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர்கள், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பல ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கும். ஒரு காலத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கியதையே பெரிதாகப் பேசிய ஊர் இது, ஆனால் இன்றோ சிலர் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதைய பிரம்மாண்டமான படம் என ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படம் தான் அதிகம் குறிப்பிடப்படுகிறது. இப்படத்தில் ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஆலியா பட் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஹிந்தியில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்கள் தென்னிந்திய மொழிகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால், ராஜமவுலி படம் என்பதால் ஆலியா பட் நடிக்க சம்மதித்தார். 'பாகுபலி' படங்கள் ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்றதே அதற்குக் காரணம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் ஆலியா நடிக்க சம்மதித்துள்ளார். அதற்காக ஹிந்தி இயக்குனர் கரண் ஜோஹர் தான் அதிகம் பேசினார் என்கிறார்கள்.
இப்படத்தில் நடிக்க மொத்தமே 10 முதல் 15 நாட்கள் தான் ஆலியா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். படத்தில் அவருடைய கதாபாத்திரத் தேவையும் அவ்வளவுதான் என்கிறார்கள். ஒரு நாள் சம்பளமாக ஆலியாவிற்கு 50 லட்சமும், அவருடைய உதவியாளர்களுக்காக மொத்தம் 1 லட்ச ரூபாயும் கொடுக்கப்படுகிறதாம். இவை தவிர ஹோட்டல் தங்கும் வசதி, இதரவு செலவுகள் தனியாம். எப்படியும் 10 கோடி வரை அவருக்கென மொத்த செலவு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆலியா இருப்பதால் ஹிந்தி வெளியீட்டின் வெற்றிக்கு அது உதவும் என்பதால் செலவு பற்றி கவலைப்படவில்லையாம் தயாரிப்பாளர்கள். 400 கோடி செலவில் 10 கோடி பெரிய தொகை கிடையாதே.....
1572 days ago
1572 days ago