உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் மாநாடு ஓடிடியில் வெளியாகிறதா?

சிம்புவின் மாநாடு ஓடிடியில் வெளியாகிறதா?

வெங்கட்பிரபு இயக்கத்தில சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.

படம் திரைக்கு வர தயாராகும் நேரத்தில் கொரோனா இரண்டாவது அலையினால் தியேட்டர்கள்மூடப்பட்டிருப்பதால் இப்படம் தியேட்டரில் வெளியாகுமா? இல்லை ஓடிடி தளத்தில் வெளியாகுமா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இந்த தருணத்தை பயன்படுத்தி மாநாடு படத்தை கைப்பற்ற சில ஓடிடி தளங்கள் போட்டி போடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட படக்குழு. தியேட்டர்கள் திறந்து சகஜமான நிலை ஏற்படும் வரை காத்திருந்து மாநாடு படத்தை வெளியிடும் முடிவில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !