உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரேம்ஜியின் தமிழ் ராக்கர்ஸ் - பர்ஸ்ட் லுக் வெளியானது!

பிரேம்ஜியின் தமிழ் ராக்கர்ஸ் - பர்ஸ்ட் லுக் வெளியானது!

தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் பிரேம்ஜி, 2015ல் மாங்கா என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது தமிழ் ராக்கர்ஸ் என்ற படத்தில் மீண்டும் அவர் நாயகனாக நடித்துள்ளார்.

பரணி ஜெயபால் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை பிச்சாண்டி தயாரித்துள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு அவரது தந்தையான கங்கை அமரன் பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி. அதில், வலது கையில் சைக்கிள் செயின், இடது கையில் சாராய பாட்டில், வாயில் சிக்ரெட்டை வைத்து புகையை ஊதியபடி அதிரடியான கெட்டப்பில் தோன்றுகிறார் பிரேம்ஜி.

மேலும் இந்த படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் என்று பெயர் வைத்திருப்பதால், எந்த படங்கள் திரைக்கு வந்தாலும் அன்றைய தினமே அதை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு படமாக இருக்கும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !