வரலட்சுமி வெளியிட்ட யோகா வீடியோ!
ADDED : 1570 days ago
தமிழ், தெலுங்கு படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி. சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், ஆதரவற்ற நாய்களை பராமரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள அவர், தற்போது தான் யோகா செய்யும் ஒரு வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.