பீஸ்ட் - விஜய் 65 பட தலைப்பு
ADDED : 1569 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ளது. படத்திற்கு தலைப்பு வைக்காமல் தற்காலிகமாக விஜய் 65 என பெயரிட்டு இதுநாள் வரை படப்பிடிப்பு நடந்து வந்தனர். இந்நிலையில் இப்போது ‛பீஸ்ட்' என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கையில் துப்பாக்கி உடன் ஸ்டைலாக உள்ளார் விஜய். நாளை(ஜூன் 22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு போஸ்டர் வெளியான சற்றுநேரத்திலேயே பீஸ்ட் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.