வலிமை வில்லனுக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்
ADDED : 1594 days ago
பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன், மாயோன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா. தற்போது தெலுங்கில் ராஜா விக்ரமார்க்கா என்ற படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்கிறார். ஸ்ரீசரிப்பள்ளி என்பவர் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மேலும், ராஜா விக்ரமார்க்கா என்ற தலைப்பு 1990ல் சிரஞ்சீவி - அமலா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பாகும். இதையடுத்து, சிரஞ்சீவியின் பட தலைப்பில் தான் நடிப்பது தனக்கு கிடைத்த பெருமை என்கிறார் கார்த்திகேயா.