கன்னட நடிகர் யஷ்க்கு ஜோடியாகும் தமன்னா
ADDED : 1593 days ago
தமிழில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா. அதோடு வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் கன்னடத்தில் கேஜிஎப் படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகியிருக்கும் யஷ் நடிக்கும் புதிய படத்தில் தமன்னா இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎப் 2 படத்தில் நடித்து முடித்துவிட்ட யஷ், அடுத்து நார்தன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகும் இதில் ராணுவ அதிகாரியாக யஷ் நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் தமன்னாவை நாயகியாக நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடும் விதமாக உருவாக்க எண்ணி உள்ளனர். மேலும் ஹிந்தி நடிகை ஒருவரையும் நடிக்க வைக்க பேசி வருகின்றனர். ஏற்கனவே யஷின் கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு தமன்னா ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.