உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகன் வீடியோவை பகிர்ந்த பிக்பாஸ் ரேஷ்மா

மகன் வீடியோவை பகிர்ந்த பிக்பாஸ் ரேஷ்மா

கடந்த 2016ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் ரேஷ்மாவின் மகன் தந்தையர் தினத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இசைக்கோர்ப்பை உருவாக்கி பரிசளித்து தனது தாய் ரேஷ்மாவிற்கு வாழ்த்து கூறுகிறார்.

அதற்கு ரேஷ்மா, அன்பு, பொறுமை, இரக்கம், பாராட்டு, உந்துதல், குழந்தைகளுக்காக நாம் செய்யும் எல்லாவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இப்படி ஒரு மகன் பெற்றதற்கு நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். நாம் நம் குழந்தைகளிடம் நண்பனாகவும் ஆசிரியராகவும் இருக்கவேணும். என்ன ஆனாலும், நான் உன் கூடவே இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !