உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சேத்துமான் அரசியல் படம்: இயக்குனர் விளக்கம்

சேத்துமான் அரசியல் படம்: இயக்குனர் விளக்கம்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கும் படம் சேத்துமான். இது எழுத்தாளர் பெருமாள் முருகனின் வறுகறி என்ற நாவலை தழுவி உருவாகி உள்ளது. தாத்தா பேரன் அன்பை மையமாக கொண்ட இந்த படத்தில் தாத்தாவாக வெங்காயம் படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமாரின் தந்தை மாணிக்கம் நடிக்கிறார். இவர் வெங்காயம் படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்திருந்தார். பேரனாக அஸ்வின் என்ற சிறுவனன் நடித்திருக்கிறார்.

தற்போது இந்த படம் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. கொரோனா பிரச்சினை முடிந்ததும் தியேட்டரில் வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் தமிழ் கூறியதாவது: இயக்குனர்கள் லிங்குசாமி, வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றி விட்டு நான் இயக்கி இருக்கும் முதல் படம் இது.

தனியாக படம் இயக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நிறைய நாவல்கள் படித்தேன். அதில் எனக்கு பிடித்த நாவலாக வறுகறி இருந்தது. அதையே திரைக்கதை எழுதி இயக்கி உள்ளேன். அடிப்படையில் இது தாத்தா பேரனுக்கு இடையிலான அன்பை சொல்லும் கதைதான். ஆனால் படம் முக்கியமாக பேசுவது அரசியலை. இது உணவு அரசியலையும் கல்வி அரசியலையும் பேசுகிறது.

கொங்கு வட்டாரத்தில் நடக்கும் கதை என்பதால் படத்தில் நடித்துள்ள அனைவருமே கொங்கு நாட்டு பகுதியை சேர்ந்தவர்கள், அந்த வட்டார மொழி பேசி நடித்திருக்கிறார்கள். அருவி படத்துக்கு இசை அமைத்த பிந்து மாலினி இசை அமைத்திருக்கிறார். காலா படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் விரையில் தியேட்டரில திரையிடப்படுகிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !