உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மரைக்காயருக்கு வழிவிடும் மலையாள திரையுலகம்

மரைக்காயருக்கு வழிவிடும் மலையாள திரையுலகம்

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் .150 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்த படம் கடந்த 2 வருடமாக கொரோனா கால ஊரடங்கால் முடங்கி உள்ளது. இதனால் அதன் தயாரிப்பாளருக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படம் ஓணம் பண்டிகை தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி, 600 திரைகளில் வெளியிடப்பட்டுகிறது. இதற்காக படத்தின் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள் சங்கம், மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்.

படம் வெளியான 3 வாரங்கள் வரையில் வேறு எந்த படமும் தியேட்டரில் திரையிடப்படக்கூடாது. என்பதே அந்த ஒப்பந்தம். கேரளாவில் மூடப்பட்டிருக்கும் தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்களை தியேட்டருக்கு கொண்டு வர இந்த படத்தால் தான் முடியும் என்பதால் இதற்கு இரண்டு சங்கங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. 3 தேசிய விருதுகள் பெற்றுள்ள இந்த படம் மலையாள சினிமாவின் கவுரவமாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !