நகை விற்பனையில் இறங்கிய சமந்தா
ADDED : 1575 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சகுந்தலம்' போன்ற படங்கள் உள்ளன.
இதற்கிடையில் சமந்தா தற்போது புதிய தொழில் ஒன்றை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா சாக்கி என்ற பேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அது பெண்களுக்கான பேஷன் நிறுவனமாகும், சமந்தாவின் இந்த நிறுவனத்திற்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறதாம். சமந்தா தற்போது மேலும் தனது தொழிலை விரிவுபடுத்த விரும்புகிறார். அதற்காக கடந்த இரண்டு மாதங்களாக முழு திட்டத்தில் ஈடுபட்டுள்ளராம். சமந்தா பேஷன் நகை தொழிலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.