ஹீரோவில் நிதி அகர்வால்
ADDED : 1565 days ago
ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால், மீண்டும் தெலுங்கிற்கு சென்று பவன் கல்யாணுடன் ஹரிஹர வீரமல்லு என்ற பீரியட் படத்தில் நடிக்கிறார். இப்படம் துவங்க சற்று தாமதம் ஆகும் என தெரிகிறது. இதையடுத்து தெலுங்கு நடிகர் அசோக் கல்லாவுக்கு ஜோடியாக ஹீரோ என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் சில கமர்சியல் படங்களில் நடிப்பதற்கான தீவிர படவேட்டையிலும் இறங்கியிருக்கிறார் நிதி அகர்வால்.