விஜய் சேதுபதி ஜோடியாகும் கத்ரீனா கைப்
ADDED : 1565 days ago
தமிழில் 2017ல் வெளியான மாநகரம் படத்தை ஹிந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இப்படத்தில் பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து தமிழ்ப்பதிப்பில் முனீஷ்காந்த நடித்த வேடத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இதையடுத்து ஹிந்தியில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது டைகர்-3 என்ற ஆக்சன் திரில்லர் படத்தில் நடித்து வரும் அவர் விரைவில் அப்படத்தை முடித்து விட்டு விஜய் சேதுபதியுடன் இணையப்போகிறாராம். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்த மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் முழுப் படப்பிடிப்பையும் புனேயில் முப்பதே நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.