உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் வலிமை அப்டேட் எப்போது? புதிய தகவல்

அஜித்தின் வலிமை அப்டேட் எப்போது? புதிய தகவல்

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஒரு ஆக்சன் காட்சியை வெளிநாடு சென்று படமாக்க திட்டமிட்ட நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை வந்து விட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் அந்த காட்சியை வெளிநாடு அல்லது இந்தியாவிலேயே படமாக்க முடிவு செய்திருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வலிமை அப்டேட் வெளியாகும் என்று அறிவித்து விட்டு கொரோனா அலை காரணமாக அதை நிறுத்தி வைத்திருந்த நிலையில், ஜூலை மாதம் இறுதியில் இருந்து வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ரிலீஸ் தேதி என அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !