கார்த்தி படத்தில் வில்லியாக சிம்ரன்
ADDED : 1617 days ago
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். இப்படத்தின் போஸ்டரில் முதிர்ச்சியான கெட்டப்பில் கார்த்தி இடம் பெற்றதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் வில்லியாக சிம்ரன் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லத்தனம் செய்திருந்த சிம்ரன், இந்த படத்தில் ஷோலோ வில்லியாகவே அதகளப்படுத்தப்போவதாகவும் சொல்லப்படுகிறது.