ஆன்லைனில் சரக்கு ஆர்டர் செய்து ஏமாந்த 70 வயது நடிகை
ADDED : 1661 days ago
1980 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த பாலிவுட் நடிகை சபனா ஆஸ்மி, அரசியலிலும் குதித்து பார்லிமென்ட் உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சபனா ஆஸ்மி தற்போது முதுமை காரணமாக சினிமா, அரசியல் இரண்டில் இருந்தும் விலகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 70 வயதான சபனா ஆஸ்மி, ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்து ஏமாந்திருக்கிறார். இதுகுறித்து அவர் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதி இருப்பதாவது: நான் மதுபானம் வாங்க ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தேன். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தி விட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அதனை டெலிவரி செய்யவில்லை. நான் போன் செய்தும் எனது அழைப்புகளை எடுக்கவில்லை. என்னிடம் மோசடி செய்துவிட்டனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள். என்று எழுதியுள்ளார்.