உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயகாந்துடன் நடித்த அனுபவம்- நதியா வெளியிட்ட 34 வருட மலரும் நினைவு!

விஜயகாந்துடன் நடித்த அனுபவம்- நதியா வெளியிட்ட 34 வருட மலரும் நினைவு!

1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. அவருக்கென்று ஒரு பெரும் ரசிகர் வட்டமே அப்போது உருவாகியிருந்தது. அவரது பெயரில் பெண்களுக்கு அழகு சேர்க்கும் தோடு, சேலை என பல விஷயங்கள் விற்பனைக்கு வந்தன. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில செட்டிலான நதியா மீண்டும் தென்னிந்திய படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் உடன் தான் பூமழை பொழியுது என் படத்தில் நடித்தபோது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு, விஜயகாந்துடன் நான் நடித்த முதல் படம் பூமழை பொழியுது. அழகப்பன் இயக்கிய இந்த படத்திற்கு ஆர்.டி.பர்மன் இசையமைத்தார். இந்த படத்தில் தான் முதன்முதலாக வெளிநாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஜப்பான், ஹாங்காங் நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது என்று பதிவிட்டுள்ளார் நதியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !