கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் மறைவு
ADDED : 1562 days ago
இயக்குனர்கள் கே.ஆர்.ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்து சண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள் படங்களிலும் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் இவர். கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் தொடர்ந்து மூன்று முறை தேர்வாகி பணிபுரிந்து வந்தார். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர்(ஜூன்27) இன்று மரணம் அடைந்தார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து இவரது உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை(ஜூன் 28) 12 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.