20 மில்லியனை கடந்த தமன்னாவின் பாடல்
ADDED : 1562 days ago
தெலுங்கில் கோபிசந்த் - தமன்னா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் சீட்டிமார். சம்பத் நந்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வரவேண்டிய இப்படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இன்னும் வெளியாகவில்லை. கபடி பயிற்சியாளர் ஜூவாலா ரெட்டியாக சீட்டிமார் படத்தில் நடித்துள்ளார் தமன்னா. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஜூவாலா ரெட்டி என்ற பாடல் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. தற்போது இந்த பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.