கண் பார்வையில்லாத வேடத்தில் அல்லு அர்ஜூன்
ADDED : 1562 days ago
தெலுங்கில் தற்போது தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன், கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் அடுத்த மாதம் இப்படத்தில் நடிக்கிறார். இன்னும் இரண்டு மாதத்தில் புஷ்பா முதல் பாகத்தில் நடித்து முடிக்கும் அல்லு அர்ஜூன், அதைத் தொடர்ந்து தில் ராஜூ தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த படத்தை ஸ்ரீராம்வேணு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் முதல்முதலாக கண்பார்வை இல்லாதவராக நடிக்கிறார் அல்லு அர்ஜூன். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுவரை நான் நடிக்காத வேடம். என்ற போதும் தைரியமாக அதை எதிர்கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜூன்.