அசோக் செல்வன் அடுத்த படம் துவங்கியது
ADDED : 1557 days ago
ஓ மை கடவுள் படத்திற்கு பின் கவனிக்கத்தக்க நடிகராகி விட்ட அசோக் செல்வன் இப்போது ஹாஸ்டல் படத்தில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கிலும் நடிக்கும் இவர் அடுத்தப்படியாக அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். வயகாம் 18 ஸ்டுடியோஸ் - ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். இன்று(ஜூன் 28) பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.