விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்
ADDED : 1559 days ago
வித்தியாசமான கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. பன்முக திறமைக் கொண்ட இவர், முழுக்க முழுக்க நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் 'கோடியில் ஒருவன்' படத்தில் நடித்து இருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.
'விடியும் முன்' என்ற படத்தை இயக்கிய பாலாஜி இயக்கத்தில் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி இணையவுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க நடிகை ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரித்திகா சிங், மாதவனுடன் 'இறுதிச்சுற்று', அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.