சிம்பு பாடிய ஆல்பத்தில் காளிதாஸ்
ADDED : 1566 days ago
நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ். பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் வரும் தங்கம் கதையில் சிறப்பாக நடித்து பாராட்டை பெற்றார். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் ஒரு படத்திலும், மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் உடன் ஒரு போட்டோவை பகிர்ந்து ‛‛விரைவிலேயே நல்ல சில விஷயங்கள் வரப்போகின்றன” என குறிப்பிட்டு, சிம்புவையும் டேக் செய்தார்.
தற்போது இதற்கு விடை கிடைத்துள்ளது. தனியிசை ஆல்பம் ஒன்றில் இவர் நடித்துள்ளார். இவருடன் நடிகை மேகா ஆகாஷூம் நடித்துள்ளார். இந்த ஆல்பத்தை சிம்பு பாடியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். புதியவர் ஏகே.பிரியன் இசையமைத்துள்ளார். விரைவில் இந்த ஆல்பம் வெளியாக உள்ளது.