குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திகா
ADDED : 1566 days ago
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதா. இவரின் மூத்த மகள் கார்த்திகா கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அன்னக்கொடி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், மலையாளத்தில் சில படங்களிலும் நடித்தார். தமிழில் அருண் விஜய் உடன் இவர் நடித்துள்ள வா டீல் படம் வெளியாகாமல் நீண்டநாள் கிடப்பில் கிடக்கிறது.
இந்நிலையில் சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி உள்ள கார்த்திகா இன்று(ஜூன் 29) தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வீட்டிலேயே தனது அப்பா, அம்மா, தங்கை மற்றும் நடிகையும், இவரின் பெரியம்மாவுமான அம்பிகா ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைலராகின.