தியாகராஜன் - பிரசாந்த் ரூ.10 லட்சம் கொரோனா நிதி
ADDED : 1565 days ago
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக திரையுலகினர் பலரும் முதல்வரின் பொது நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், இவரது மகனும், நடிகருமான பிரசாந்த் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன், ‛‛முதல்வரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். கொரோனாவிற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளேன். முதல்வரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். கருணாநிதியை பார்ப்பது போலவே உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.