விஜய் கொரோனா தடுப்பூசி போட்டதாக தகவல்
ADDED : 1567 days ago
கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தி இருந்தால் பாதிப்பு காரணமாக சினிமாத்துறையிலும் பலர் உயிரிழந்தனர். அதோடு பொதுமக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். இதனால் பல நடிகர் நடிகைகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, சூரி, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு பொதுமக்களையும் போட்டுக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்தனர். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகதகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படத்தை விரைவில் அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.