ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் - ரகுல்
ADDED : 1567 days ago
2018ல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ராட்சசன். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் நிலையில், ஹிந்தியில் ஆயுஸ்மான் குரோனா நடிப்பில் ரீமேக் செய்யப்படும் வேலைகள் நடந்து வந்தது. ஆனால் இப்போது ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அக்ஷய் குமார் இப்படத்தை தயாரித்து, நடிப்பதாகவும், நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளதாகவும், ரஞ்சித் திவாரி இயக்குவதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையான இதை ஹிந்திக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளனர்.