வெப்சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா
ADDED : 1567 days ago
‛டான், மாநாடு, பொம்மை, கடமையை செய்' என பல படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இந்நிலையில் முன்னணி நடிகர்கள் பலரும் வெப்சீரிஸில் நடிப்பது போன்று இவரும் முதன்முறையாக வெப்சீரிஸ் களமிறங்குகிறார். முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் இவர் நடிக்க உள்ளார். இதை விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் சீரிஸாக உருவாகும் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் துவங்குகிறது.