இயக்குனர் கார்த்திக் யோகி திருமணம்
ADDED : 1608 days ago
சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகிக்கும், வினி ஷாமுக்கும் என்பவருக்கும் திருச்சியில் திருமணம் நடந்தது. திருமணத்தில், நடிகர் சந்தானம் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவர் தவிர நடிகர்கள் காளி வெங்கட், கண்ணன் ரவி, வத்ஸன் ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் சந்தானம் மூன்று விதமான கெட் அப்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. 2027ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்துவதற்காக டைம் டிராவல் செய்வதுதான் கதை.