சிரஞ்சீவி படத்தின் வேலைகளை ஆரம்பித்த மோகன்ராஜா - தமன்
தற்போது சிரஞ்சீவி கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதை முடித்துவிட்டு தனது 153 வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிரஞ்சீவி. கடந்த வருடம் மலையாளத்தில், பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான லூசிபர் படத்தின் ரீமேக்கில் தான் நடிக்க இருக்கிறார் சிரஞ்சீவி.
இந்த படத்தை மோகன்ராஜா இயக்க உள்ளார். இடையில் இந்த படத்தின் இயக்குனரை மாற்ற போவதாகவும், இந்த படமே கைவிடப்ப போவதாகவும் சில செய்திகள் மீடியாவில் உலா வந்தன. ஆனால் அவை எல்லாம் உண்மை இல்லை என்று கூறுவது போல். இந்த படத்தின் பாடல்களுக்கான இசை அமைக்கும் பணிகளில் இயக்குனர் மோகன்ராஜாவும் இசையமைப்பாளர் தமனும் களத்தில் இறங்கி விட்டார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக, தமனின் ஸ்டுடியோவில் பணிபுரியும்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா.