தப்பு பண்ணிட்டேன் - யுவன் வெளியிட்ட போஸ்டர்
ADDED : 1582 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்திற்கு இசைமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. மேலும், தனது யு1 ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ நிறுவனம் மூலம் அவ்வப்போது ஆல்பங்களுக்கும் இசையமைத்து வெளியிட்டு வரும் யுவன், தற்போது தப்பு பண்ணிட்டேன் என்ற பெயரில் ஒரு தனிப்பாடலுக்கான ஆல்பத்தை தயாரித்துள்ளார். இந்த ஆல்பத்திற்கு ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார். மேலும், தப்பு பண்ணிட்டேன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடலை சிம்பு பின்னணி பாடியிருக்கிறார். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த போஸ்டரை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.