உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூர்யா பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூரரைப்போற்று படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா உளபட பலர் நடிக்கிறார்கள். சமூக பிரச்னைக்காக போராடும் வேடத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 முதல் மீண்டும் காரைக்குடியில் தொடங்குகிறது. ஜூலை 23ந்தேதி சூர்யாவின்46வது பிறந்த நாளாகும். அன்றைய தினம் சூர்யா 40ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !