உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோயின்களை மட்டும் பார்த்து கேட்பது ஏன் - டாப்சி

ஹீரோயின்களை மட்டும் பார்த்து கேட்பது ஏன் - டாப்சி

ஒரு காலத்தில் சினிமாவில் லட்ச ரூபாய் சம்பளம் என்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அதன்பின் அது ஒரு கோடியாக மாறியது. இப்போது 100 கோடி சம்பளம் வாங்குபவர்களைப் பார்த்து ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது ரஜினிகாந்தும், விஜய்யும் தான் 100 கோடி சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். நாயகிகளில் அதிக பட்சமாக நயன்தாரா 4 கோடி வரை வாங்குகிறார் என்று தகவல்.

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலேயே நாயகர்களுக்கு இணையான சம்பளம் வாங்கியவர் பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாள். அவர் லட்ச ரூபாய் வாங்கிய சம்பளம் பற்றி இப்போதும் பேசுவார்கள்.

ஆனால், காலம் மாறினாலும் நாயகிகள் வாங்கும் சம்பளம் பற்றித்தான் அதிகமாகப் பேசுகிறார்கள். அதிகபட்சமாக இந்தியாவில் நாயகிகளுக்கு 10 கோடி சம்பளம் என்பதே அதிகமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம் நாயகர்கள் 100 கோடி வாங்கினாலும் அதைப் பற்றிப் பெரிதாகப் பேச மாட்டார்கள்.

சமீபத்தில் ஹிந்தி நடிகையான கரினா கபூர் 'சீதா' படத்தில் நடிப்பதற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை டாப்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

“கரீனா கபூர் நமது திரையுலகத்தில் உள்ள ஒரு பெரிய பெண் சூப்பர் ஸ்டார். அவரது காலத்தில் அவர் அப்படி சம்பளம் கேட்பது நியாயமானதுதான். அதுதானே அவருடைய வேலை. ஒரு நடிகர் அவரது சம்பளத்தை உயர்த்தும் போது அது யாருக்கும் பிரச்சினையாகத் தெரியவில்லை. அதே சமயம் ஒரு நடிகை அவரது சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் அது சர்ச்சையாக்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !