திருமணத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த சுவாதி
ADDED : 1560 days ago
சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் தெலுங்கு நடிகையான சுவாதி. அந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் பாடல் தற்போது வரை இளைஞர்களின் பேவரிட் பாடலாக இருந்து வருகிறது. பின்னர் கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
2018-ல் தனது காதலர் விகாசை திருமணம் செய்து கொண்டார் சுவாதி. விகாஸ் விமானியாகக் பணியாற்றுகிறார். இந்த ஜோடி கடந்த சில வருடங்களாக இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.