பவன் கல்யாணுக்காக பவர்புல் கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத்!
ADDED : 1555 days ago
மகதீரா, பாகுபலி, பாகுபலி 2, மெர்சல், மணிகர்னிகா, தலைவி, ஆர்ஆர்ஆர் என பல படங்களுக்கு கதை எழுதியவர் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். தற்போது பாலிவுட்டில் தயாராகும் சீதா என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திற்காகவும் ஒரு கதையை எழுதி கொடுத்துள்ள விஜயேந்திர பிரசாத், அடுத்தபடியாக பவன்கல்யாணுக்காக ஒரு பவர்புல்லான கதையை எழுதி வருகிறாராம். இந்த கதையை பவன்கல்யாணிடம் அவர் சொன்னபோது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொன்னதை அடுத்து அந்த ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கியிருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.
தற்போது அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் மற்றும் ஹரிஹர வீரமல்லு ஆகிய படங்களில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படங்களை முடித்ததும் விஜயேந்திர பிரசாத் எழுதி வரும் கதையில் நடிக்கப்போகிறார்.