ஆபாச குறுஞ்செய்தி : சைபர் கிரைமில் சனம் ஷெட்டி புகார்
ADDED : 1580 days ago
அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. சமூகவலைதளத்தில் இவர் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக உரிய ஆதாரங்களையும் போலீசாரிடம் அவர் வழங்கி உள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.