பாலியல் சீண்டல் : டிவி நடிகர் கைதாகி ஜாமினில் விடுவிப்பு
ADDED : 1553 days ago
பிரபல ஹிந்தி சீரியல்களில் நடித்து வருபவர் பிராச்சீன் சவுகான். இவர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் சீண்டல் புகார் அளித்தார். குடிபோதையில் தன்னிடம் தகாத முறையில் நடந்ததாகவும், தனது உடல் அங்கங்களை தொட்டதாகவும் அந்த பெண் புகார் கூறி உள்ளார். இதையடுத்து நடிகர் பிராச்சீனை மும்பை போலீசார் கைது செய்தனர். இதன்பின் போரிவலி கோர்ட்டில் நடிகர் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.