முதல்வருடன் செல்பி எடுத்த யாஷிகா ஆனந்த்
ADDED : 1552 days ago
கவலை வேண்டாம் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சைக்கிளிங் செல்வது வழக்கம். பெரும்பாலும் சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வோர். முதல்வரான பிறகும் வழக்கமாக சைக்கிளிங் செல்வதை கடைபிடித்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல்வர் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் மேற்கொண்டார். அவருக்கு அதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவளம் முதல் மாமல்லபுரம் வரை அவர் சைக்கிளிங் செய்தார்.