உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் வினோத் பெயரில் போலி ஐடியில் வலிமை அப்டேட்

இயக்குனர் வினோத் பெயரில் போலி ஐடியில் வலிமை அப்டேட்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத், அஜித் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். அஜித் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1-ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் மக்கள் அல்லல்படும் இந்த நேரத்தில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இதனால் வலிமை படத்தின் அப்டேட் வெளியிடுமாறு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே வலிமை அப்டேட் என்று பல பொய்யான ஐடிகளில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன. அவற்றை டுவிட்டரும் நீக்கி வருகிறது. சமீபத்தில் வலிமை இயக்குனர் வினோத் பெயரில் ஐடி ஒன்று வலிமை பட தகவல்களை வெளியிட்டது. “வலிமை படத்தின் அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டது. ஓவர்சீஸ் ரைட்ஸ், உள்ளூர் தியேட்டர்கள் ரைட்ஸ், சேட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் என்று அனைத்துமே முடிந்துவிட்டது” என்று @DirectorHVinoth என்ற டுவிட்டர் ஐடியில் வெளியிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என்று நம்பி எல்லோரும் பகிரத் தொடங்கினர். ஆனால், கடைசியில் இயக்குநர் வினோத் பெயரிலான இந்த ஐடியும் போலி என்பதை அறிந்து இந்த ஐடியைத் தற்போது ட்வீட்டர் நிர்வாகம் முடக்கிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !