உமா படப்பிடிப்பு : கோல்கட்டா சென்றார் காஜல்
ADDED : 1551 days ago
ஆச்சார்யா, ஹேய் சினாமிகா, இந்தியன்-2 ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், ஹிந்தியில் தயாராகும் உமா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் மும்பையிலேயே இருந்து வந்த காஜல், கோல்கட்டாவில் தொடங்கியுள்ள உமா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ததகதா சிங்கா என்பவர் இயக்கும் இந்த படத்தின் கதை மேற்கு வங்கத்தின் பின்னணியில் நடக்கிறது.