பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லும் ராஜமவுலி
ADDED : 1550 days ago
1920 காலகட்டத்தில் வாழ்ந்த அல்லூரி சீதா ராமராஜூ, கோமரம் பீம் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்ஆர்ஆர். இந்தபடத்தின் படப்பிடிப்பு கொரோனா அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது.
அதில் ஒரு பாடலை உக்ரைனில் உள்ள அரண்மனையிலும், இன்னொரு பாடலை ஐரோப்பாவிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாடல் காட்சிகளில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் மற்றும் படத்தில் நடிக்கும் மேலும் சில நடிகர் நடிகைகளும் இடம் பெறுகிறார்களாம். அந்தவகையில் இந்த இரண்டு பாடல்களுமே அடுத்த மாதத்தில் படமாக்கப்பட்டு பூசணிக்காய் உடைத்து விடுவார்கள் என்றும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.