நந்தினிரெட்டி படத்தில் குக்கூ மாளவிகா நாயர்
ADDED : 1634 days ago
சமந்தா நடித்த ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி, அதையடுத்து பிட்டா கதலு என்ற பெயரில் நெட்பிளிக்சிற்காக ஒரு ஆந்தாலஜி படத்தை இயக்கினார். அதில் அமலாபால, ஜெகபதிபாபு என பலர் நடித்தனர். அதையடுத்து அவர் மீண்டும் ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அன்னி மஞ்சி சகுனமுலே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் சந்தோஷ் ஷோபனுக்கு ஜோடியாக குக்கூ மாளவிகா நாயர் நடிக்கிறார். குக்கூ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்தபோதும் தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாத மாளவிகா நாயர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.