நவராத்திரி ரீமேக்கில் நடிக்க மறுத்த திலீப் குமார்
ADDED : 1599 days ago
மறைந்த ஹிந்தி நடிகர் திலீப் குமார் தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்த படம் நவராத்திரி. இந்த படத்தை தெலுங்கில் எடுத்த போது அதில் தெலுங்கு முன்னணி நடிகரான நாகேஸ்வரராவ் நடித்தார். அந்தப் படத்தை ஹிந்தியில் எடுக்க முடிவு செய்து நடிகர் திலீப் குமாரை படக்குழுவினர் அணுகினார்கள். படத்தை பார்த்த திலீப்குமார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல தன்னால் நடிக்க முடியாது என்று கூற வேறு வழியில்லாமல் சஞ்சீவ்குமாரை வைத்து எடுத்தார்கள்.