வாழ்த்து மழையில் ரேவதி
ADDED : 1553 days ago
பாரதிராஜா இயக்கிய மண்வாசனை படத்தில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. அதையடுத்து ரஜினி, கமல், கார்த்திக் என அனைத்து முன்வரிசை நடிகர்களுடனும் நடித்து மிகப்பெரிய ரவுண்டு வந்தவர். தமிழ் மட்டுமல்லாது பிற தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்தார். சில படங்களையும் இயக்கிய ரேவதி, புதிய முகம் படத்தை இயக்கி நடித்த சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றார்.
தற்போதும் படங்களில் பிஸியான வேடங்களில் நடித்து வரும் ரேவதி இன்று தனது 55ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு சினிமாத் துறையினரும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் ரேவதி என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங்கில் உள்ளது.