உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனசேனா கட்சி உறுப்பினர்களின் ஆயுள் காப்பீட்டுக்கு ரூ.1 கோடி வழங்கிய பவன் கல்யாண்!

ஜனசேனா கட்சி உறுப்பினர்களின் ஆயுள் காப்பீட்டுக்கு ரூ.1 கோடி வழங்கிய பவன் கல்யாண்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர் பவன்கல்யாண் அதன்பிறகு கடந்த சில மாதங்களாக எந்த படப்பிடிப்பு, நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். ஜூலை 12 முதல் அய்யப்பனும கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் நேற்று மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்துக்கு வந்த பவன் கல்யாண் கட்சி கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, உயிரிழந்த கட்சி நிர்வாகிகளுக்காக அஞ்சலி செலுத்திய அவர், கொரோனா காலத்தில் மக்கள் பணியாற்றிய கட்சி தொண்டர்களை பாராட்டினார். அதைத் தொடர்ந்து கட்சி பணியில் உள்ள உறுப்பினர்களின் ஆயுள் காப்பீட்டிற்காக ரூ. 1 கோடி வழங்கிய பவன் கல்யாண், கொரோனா இரண்டாவது அலையின்போது உயிரிழந்த ஜனசேனா கட்சி உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !