மோகன்தாஸ் படத்தை முடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 1553 days ago
களவு என்ற படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கும் படம் மோகன்தாஸ். விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். திரில்லர் கதையில் இப்படம் உருவாகிறது. கொரோனா தொற்றுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பின்னர் ஊரடங்கு காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் படப்படிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றோடு தனது சம்பந்தப்படட காட்சிகளை முடித்துவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால் கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு படக்குழு விடை கொடுத்துள்ளனர்.