கவுதம் மேனன் இயக்கத்தில் இரண்டு படங்களில் சிம்பு
ADDED : 1552 days ago
கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அச்சம் என்பது மடமையடா சுமாராக ஓடியது. என்றாலும் அவர்களின் கூட்டணி என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
அந்தவகையில், தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கப் போவதாக ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். இந்த செய்தி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும், தற்போது மாநாடு படத்தை அடுத்து பத்துதல படத்தில் நடிக்கும் சிம்பு, கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் நடிக்கத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. அதனால் தனது உடல்எடையை மேலும் குறைத்து ஸ்லிம்மாக மாறிக்கொண்டு வருகிறார் சிம்பு.