உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு வரும் ரஜினி, கடந்த மாதம் சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்கா சென்றார். அங்கு வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டதோடு ஓய்வு நேரத்தில் அங்குள்ள நண்பர்கள் இல்லங்களுக்கும் சென்று வந்தார். அதோடு ரசிகர்கள் சிலரும் அவரை சந்தித்து அவருடன் போட்டோவும் எடுத்து கொண்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இன்று சென்னை திரும்பினார் ரஜினி. அமெரிக்காவிலிருந்து கத்தார் வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் அதிகாலை சென்னை வந்திறங்கினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்கும் ரஜினி, அடுத்தப்படியாக அண்ணாத்த படத்தின் டப்பிங்கில் இறங்குகிறார். இதை முடித்ததும் அவரின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளாராம். இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !